Friday, July 23, 2010

எண்ணித் துணிக காதல் கருமம்;துணிந்த பின்.........

நண்பர்களே....

இத்தால் ஒரு அறிவித்தல்.
நேரடியாக மேற்போந்த தலைப்பிற்குரிய கவிதைக்கு நுழைவதன் முன்,
இந்த கவிதை பிறந்த கதையையும் கூட கவிதையாய் கூறி இடையூறு படுத்த வேண்டிய நிர்பந்தம்....

எதை எதையோ
எழுதினேன்
கவிதை
மரபு தாண்டியே...

எல்லோரும்
தொடும் காதலை
தொட
துணிவின்றி இதுவரை நான் ...

நேற்றைய
அனுபவங்கள்
அடித்து சென்ற
புயலை....

தென்றலாய்
காதல்
எனும்
பேர் கொண்டு வருடுகிறேன் இன்று ...

ஆதலால்
நானும் வரைந்தேன்
காதல்
கவிதை ஒன்றே ...

சட்டம் சொல்லும்
செய்தவனை விட
தூண்டியவனிட்கே
தண்டனை அதிகம் என்று...

எங்கும்
நான் எழுதியதை விட
எழுத ஆற்று படுத்திய
உனக்கே அதிக விழுக்காடுகள் ...

ஆதலால் நண்ப லூ நன்றிகள் உனக்கே....

இதை இனிமையான இடையூறாக எடுத்துக் கொள்ள வேண்டி,
இனி இவள் கிறுக்கல் உங்கள் பார்வைக்கு......



எண்ணித் துணிக காதல் கருமம்;துணிந்த பின்.........








கையளவு இதயம்
என்றாலும்
கவனமான
கையிருப்பிற்கே .....

இதயம்
இடம் மாற முன்
இரு முறை சிந்தித்தல்
நிந்தித்தல் ஆகாது....

கொடுத்த பின்
சீர் தூக்கி பார்க்க
காதல்
குழந்தை விளையாட்டன்று....

கொடுத்து
மீள
காதல்
வெறும் கொடுக்கல் வாங்கலும் அன்று...

ஒரு முறை
ஒருவன் வசமாகி போனால்
மறுமுறை உயிர்க்க
அவன் நேசமே சுவாசமாகும்....

புரிதலின் இறுதியில்
பரிணமிக்கும்
புனித
காதல்..

புரிந்திடாத
வணிகன்
அதை
தனதாக்கி கொண்டால்.....

ஒரு முறை
ஒருவனிட்கேயென
தனை வரித்த
வனிதையவள் வாழ்வு.....

காலமும்
காதல் துளிர்க்கா
கண்ணீர் பொழி
பாலையே....

சுய அனுபவங்களிட்கு அப்பால் இவள் உங்களுள் ஒருத்தி ஜனஹா.....

5 comments:

  1. சூப்பர்ரோ சூப்பர் ....வாழ்த்துகள்
    ஏன் நீங்கள் திரட்டிகளில் இவ் ஆக்கங்களை வெளிட கூடாது ??

    Ex: Tamil10.com
    ta.indli.com

    ReplyDelete
  2. ஆரம்பம் தொட்டு
    தோள் கொடுத்து
    வாழ்த்தி வழிகாட்டும்
    தோழமைக்கு நன்றிகள்....திலீப்!

    சிந்திக்க வேண்டிய விடயம்....சிரத்தையில் எடுத்து கொள்கிறேன்....

    ReplyDelete
  3. உங்களின் அந்த தூய தமிழ் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனக்கெல்லாம் இப்படி எழுத வராது…
    வாழ்த்துக்கள் ஜனஹா..

    வலைப்பூ சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் உங்களிடத்தில் இருந்தால் தயங்கமால் என்னிடம் கேளுங்கள்…

    ReplyDelete
  4. janaha....i ddn xpct thz much of outpt...!!!!
    reali u hv shwd yo creativzz whc u cud shw yo talntttzzz.........!!!

    ReplyDelete
  5. காலம் கடந்து உங்கள் ஆக்கங்களை கானும் சந்தர்ப்பம் கிடைத்தது. யாழில் காணாமல்போய்விட்ட நல்ல தமிழை கொழும்பிலிருந்து உங்களிடம் கண்ட மகிழ்ச்சி தமிழில் தொடரவும் உயரவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete